பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரன் - ரஜினிகாந்த் வாழ்த்து
தனது பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
![பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரன் - ரஜினிகாந்த் வாழ்த்து பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரன் - ரஜினிகாந்த் வாழ்த்து](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/1500x900_36455822-paro.gif)
சென்னை,
நடிகரும், தே.மு.தி.க. பிரமுகருமான மீசை ராஜேந்திரன் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். தனது பிறந்த நாளையொட்டி, உடல் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரனுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் உடல் உறுப்பு தானம் செய்த நடிகர் மீசை ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.