சென்னை மழை எதிரொலி.. இன்று ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் விபரம்
தொடர் மழை காரணமாக சென்னையில் சில ரெயில்கள் சேவை இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளன.;
சென்னை,
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (16-ந்தேதி) சில ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
* சென்னை சென்டிரலில் இருந்து இன்று (16-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு போடிநாயக்கனூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (20601) ரத்து செய்யப்படுகிறது.
* ஜோலார்பேட்டையில் இருந்து இன்று (16-ந்தேதி) காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16090) ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (16-ந்தேதி) மாலை 5.55 புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16089) ரத்து செய்யப்படுகிறது.
* திருப்பதியிலிருந்து இன்று (16-ந்தேதி) காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16204), மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16203) ரத்து செய்யப்படுகிறது.
* திருப்பதியில் இருந்து இன்று (16-ந்தேதி) காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16057) ரத்து செய்யப்படுகிறது.
* ஈரோட்டில் இருந்து இன்று (16-ந்தேதி) இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏற்காடு அதிவிரைவு ரெயில் (22650) ரத்து செய்யப்படுகிறது.