கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்

கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update:2025-03-21 10:54 IST
கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்

சென்னை,

தமிழக சட்டசபை கடந்த 14-ந்தேதி பட்ஜெட் உரையுடன் தொடங்கியது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது தினமும் விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில், சட்டசபை இன்று காலை தொடங்கியது.

அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்... கேள்வி கேட்கின்ற உறுப்பினர்களுக்கு முதன் முறையாக பதில் கூறுகின்ற அமைச்சர் மறைந்த தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில், முதல் கேள்விக்கு முதல் முறையாக அமைச்சர் ஆம்.. இல்லை என்று பதில் கூறுவார். அதன்பின் உறுப்பினர்கள் ஒரு கேள்வி கேட்ட பின்பு, கேள்வியை உள்வாங்கி அமைச்சர் ஒரு பதில் கூறுவார். அதிகபட்சமாக ஒரு அமைச்சருக்கு இரண்டே முக்கால் அல்லது 3 நிமிடத்தில் முடிந்துவிடும்.

எனவே.. அமைச்சர்களும் சரி... உறுப்பினர்களும் சரி.. கேள்விகளும், சுருக்கமாக இருக்க வேண்டும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும். சில விளக்கங்கள், தவிர்க்க முடியாத அளவுக்கு ஒரு பக்கத்திற்கு இருந்தால் கூட அது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். இன்று முதல் 1 மணி நேரம், சரியாக 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கேள்வி நேரம் முடிக்கப்படும். காரணம் இந்த அவை காலம் தாழ்த்தி நடப்பது வேதனைக்குரியதாக உள்ளது. எனவே இன்று முதல் தவறாமல் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்