பொங்கல் தொகுப்பு: ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
பொதுமக்கள் மிகுந்த பொருளாதார சிரமத்தில் உள்ளனர் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு தரமான பொருட்களை ரூ. 2,000 த்துடன் முன்னதாகவே தங்கு தடையின்றி வழங்கவும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம் பெறவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். காரணம் வடகிழக்குப் பருவமழையால் விவசாயிகள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயப் பயிர்கள் வீணாகி, பொது மக்கள் உடமைகளை இழந்து மிகுந்த பொருளாதார சிரமத்தில் உள்ளனர்.
தமிழக கூட்டுறவுத்துறை சார்பில், பொது மக்கள் அனைவரும் பயன்படும் வகையில், பொங்கல் விழாவை முன்னிட்டு, மூன்று வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை ஆகியவற்றை தரமாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும்.என தெரிவித்துள்ளார்.