ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி சாவு

நெல்லையில் ரெயிலில் பயணித்த வடமாநிலத்தை சேர்ந்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2025-04-18 02:51 IST

கோப்புப்படம்

நாங்குநேரி- நெல்லை ரெயில் பாதையில் மருகால்குறிச்சி அருகே நேற்று மதியம் ஒருவரின் உடல் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த நாங்குநேரி போலீசாரும், நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்து கிடந்தவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் எனவும், ரெயிலில் வரும்போது தவறி கீழே விழுந்து இறந்ததும் தெரியவந்தது. அவரது பெயர் விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்