நெல்லை: மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரதான அணைகளில் ஒன்றான மணி முத்தாறு அணை ஆகும்.

Update: 2024-12-20 13:35 GMT

நெல்லை,

மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்,

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தின் சாதகமான நீர்நிலையை கருத்தில் கொண்டு நடப்பாண்டிற்கான (2024-2025) முன்னுரிமை பகுதியான 3-வது மற்றும் 4-வது ரீச்சுகளை சார்ந்த மறைமுக பாசனப்பரப்புகளுக்கு 23.12.2024 முதல் 31.03.2025 முடிய (99 நாட்கள்) நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப பிசான பருவ சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், ஏரல், திருவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள 12,018 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்