எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம்: அமைச்சர் பெரியகருப்பன்

எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.;

Update:2025-03-27 12:20 IST
எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம்: அமைச்சர் பெரியகருப்பன்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ. நாகை மாலி, எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "100 நாள் வேலை திட்ட நிதியை முழு நேர கடைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். பகுதி நேர கடைகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம்" என்று தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்