கந்தர்வக்கோட்டை தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

கந்தர்வக்கோட்டை தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.;

Update:2025-03-25 12:59 IST
கந்தர்வக்கோட்டை தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும்:  அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கறம்பக்குடி ஒன்றியம், கறம்பக்குடி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா என்றும், கந்தவர்க்கோட்டை தொகுதியில் 2 இடங்களில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படுமா என்றும் கந்தர்வகோட்டை தொகுதி கட்சி எம்.எல்.ஏ. சின்னதுரை (மார்க்சிஸ்ட்) கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், "பால் குளிரூட்டும் நிலையம் அமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. என்னிடம் எழுதிக் கொடுத்தால் நிச்சியமாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்