சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து அதே இடத்தில் எக்ஸ்ரே எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update:2025-01-30 18:12 IST
சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து  ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

மதுரை,

புதுக்கோட்டையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி. சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடி வந்தார்.போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தார்.இதனால் பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள், அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர்.மாநில அளவில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.இந்நிலையில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து அதே இடத்தில் எக்ஸ்ரே எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகள் குறித்து புகார் அளித்ததற்காக ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதாக ஜகபர் அலியின் மனைவி மரியம் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக ஜகபர் அலி மனைவி தொடர்ந்த மனுவில் கூறியதாவது:-கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை இதுவரை வழங்கவில்லை. உடற்கூறு ஆய்வு தொடர்பான வீடியோ பதிவு கோரிய எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 10 நாட்கள் தாமதத்திற்கு பின்பு உடற்கூறாய்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலில் நடைபெற்ற உடற்கூறாய்வு உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து, இரண்டு தடய அறிவியல் நிபுணர்களோடு, எங்கள் நிபுணரையும் இணைத்து, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுத்து, மறுஉடற்கூறாய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்