செங்கல்பட்டு அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

அரசு பள்ளியில் 53 இலவச மடிக்கணினிகள் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-03-26 17:05 IST
செங்கல்பட்டு அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

செங்கல்பட்டு அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு கொடுப்பதற்காக இலவச மடிக்கணினிகள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் 53 இலவச மடிக்கணிகள் திருடுபோனதாக தெரியவந்தது. இது குறித்து உடனடியாக பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் தெரிவித்தது.

தகவலறிந்த போலீசார் அரசு பள்ளிக்கு சென்று மடிக்கணினிகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் 12ம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்