குளச்சல்: இரவிபுதூர்கடை-கருங்கல் சாலை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு
நிலம் எடுப்பு முடிந்த பின்பு இரவிபுதூர்கடை-கருங்கல் சாலை விரிவுபடுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.;

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, இரவிபுதூர்கடை முதல் கருங்கல் சாலை விரிவுபடுத்தப்படுமா என்று குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, "5.5 கி.மீ. தூரம் சாலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள 2 கி.மீ. தூரம் நிலம் கையக்கப்படுத்தப்பட்ட பின் சாலை பணிகள் விரைவில் தொடங்கும்" என்று தெரிவித்தார்.