கிருஷ்ணகிரி: கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 15 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1,300 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2025-04-21 01:48 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில எங்கும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் ஓசூர் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அடவிசாமிபுரம், நல்லூர் கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்த காமையூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 32), கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த கணேசன் (70) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.350 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக துறிஞ்சிப்பட்டி நாகராஜ் (57), சிவம்பட்டி ஆறுமுகம் (42), சுண்டேகுப்பம் சண்முகம் உள்பட மொத்தம் 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.1,300 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்