கனமழை எதிரொலி.. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது.;

Update:2024-10-25 15:37 IST

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டைக்கு அருகே கேரள எல்லையில் உள்ள பாலருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சோத்துப்பாறை கல்லார், கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்