கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை

9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-15 09:28 GMT

கிருஷ்ணகிரி,

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய இருக்கிறது. இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் நாளை டெல்டா மாவட்டங்களிலும், நாளை மறுநாள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு தற்போது அரை நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் வீட்டிற்கு சென்றடைந்ததை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்