சென்னை விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
![சென்னை விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது சென்னை விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/1500x900_36442771-state-04.webp)
சென்னை,
சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் ரூ.23.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.