ரெயில் மோதி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கேரளாவில் ரெயில் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2024-11-03 15:05 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் நேற்று (02.11.2024) பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரெயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 55), அவரது மனைவி வள்ளி (வயது 45), காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 45) மற்றும் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராஜம்மாள் (வயது 43) ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்