ஈரோடு - ஒடிசா வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் சேவைகளை ரெயில்வே நீட்டித்துள்ளது.;

Update:2025-04-25 14:39 IST

கோப்புப்படம்

ஒடிசா சம்பல்பூர்-ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பல்பூரில் இருந்து ஈரோட்டிற்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 08311) வருகிற மே மாதத்தில் 07, 14, 21, 28, ஜூன் மாதத்தில் 04, 11, 18, மற்றும் 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் சம்பல்பூரில் இருந்து (புதன் கிழமை) காலை 11.35 மணியளவில் புறப்படும்.

மறுமார்க்கத்தில், ஈரோட்டில் இருந்து சம்பல்பூருக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 08312) வருகிற மே மாதத்தில் 09, 16, 23, 30, ஜூன் மாதத்தில் 6, 13, 20, மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து (வெள்ளிக்கிழமை) மதியம் 2.45 மணியளவில் புறப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்