1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.;

Update:2025-03-12 19:59 IST
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்

சென்னை,

தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அதில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறுகிறது.

இதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் பிளஸ் 1 வகுப்பிற்கு மார்ச் 5-ம் தேதி தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதே போன்று, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது

இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை - முழு விவரம்:-

 

கோடை விடுமுறை:-

தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22-ம் தேதியில் இருந்தும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது. 

 

Tags:    

மேலும் செய்திகள்