ஈ.சி.ஆர். சம்பவம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் விளக்கம்

ஈசிஆர் ரோட்டில் ஒரு காரில் சென்ற பெண்களை வேறொரு காரில் சென்ற ஆண் நபர்கள் துரத்தி சென்று தொல்லை கொடுத்ததாக சில சேனல்களில் வந்த செய்திக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது.;

Update:2025-01-29 23:20 IST
ஈ.சி.ஆர். சம்பவம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் விளக்கம்

சென்னை,

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-

இன்று (29.01.2025) ஈசிஆர் ரோட்டில் ஒரு காரில் சென்ற பெண்களை வேறொரு காரில் சென்ற ஆண் நபர்கள் துரத்தி சென்று தொல்லை கொடுத்ததாக சில சேனல்களில் வந்த செய்திக்கு விளக்கம்.

கடந்த 26.01.2025 அன்று செல்வி சின்னி திலங் என்ற பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி 25.01.2025 அன்று நள்ளிரவு சுமார் 02.00 AM அளவில் தான் (TN-13-S-5466) என்ற காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்த போது இரண்டு கார்களில் (TN-75-E-6004, TN-09-BR-9988) வந்த 7-8 நபர்கள் திடீரென வழி மறித்துள்ளனர்.

அங்கு நிற்காமல் தனது வீட்டிற்கு சென்ற செல்வி சின்னி திலங் என்பவரை இரண்டு கார்களில் வந்த நபர்கள் துரத்தி சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்சனை செய்து அவர்களது காரை செல்வி சின்னி திலங் என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி உள்ளார்கள்.

மேலும் மேற்படிகாரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதற்காக செல்வி சின்னி திலங் என்பவர் வந்த காரை துரத்தியதாகவும் அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக வந்ததாக கூறியதை செல்வி சின்னி திலங் தரப்பு மறுத்துள்ளது.

மேற்படி புகாரின் பேரில் கானத்தூர் காவல்நிலைய மனு ரசீது எண் 22/2025 நாள் 26.01.2025 வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலைய குற்ற எண். 16/2025 u/s 126(2), 296(b), 324(2), 351(2) BNS r/w 4 of TNPHW Act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் குற்றவாளிகள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் அதன் தொடர்சியான ECR சாலையில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து துரித புலன்விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்