முதல்வர் படைப்பகம்: மாநில அரசின் நிதியில் உருவாகும் திட்டம் - உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம்

'முதல்வர் படைப்பகம்' திட்டம் மாநில அரசின் நிதியில் உருவாகும் திட்டம் என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2024-10-28 16:44 GMT

சென்னை,

தமிழக அரசு அறிவித்துள்ள 'முதல்வர் படைப்பகம்' என்ற திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. இது திரிக்கப்பட்ட தகவல் என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 'முதல்வர் படைப்பகம்' மத்திய அரசின் திட்டம் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இது திரிக்கப்பட்ட தகவல். 'முதல்வர் படைப்பகம்' முதல்-அமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சி நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தொழில்முனைவோர் ஒரே இடத்தில் பணிபுரியும் Co Working Space தளம், படிப்பதற்கு சென்னை கொளத்தூரில் ஒரு தளம், உணவு உண்பதற்கு ஒரு தளம் கட்டப்பட்டுள்ளது.

பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள Co Working space திட்டம் என்பது மத்திய அரசின் Startup India மற்றும் தமிழ்நாடு அரசின் TN Startup திட்டங்களின் நிதியுதவியுடன் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்