சென்னை - பெங்களூரு போட்டி: நாளை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன;

Update:2025-03-27 09:04 IST
சென்னை - பெங்களூரு  போட்டி: நாளை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . இதில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன

இந்த போட்டியையொட்டி நாளை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்காக, நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்