சென்னை: டேபிள் பேனை இயக்கியபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

டேபிள் பேனை ஊக்கை வைத்து இயக்கியுள்ளார்.;

Update:2025-04-07 21:07 IST
சென்னை: டேபிள் பேனை இயக்கியபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த சிறுவன் சூர்யா (வயது 11). இவர் இன்று தனது வீட்டில் உள்ள டேபிள் பேனை இயக்க முயற்சித்துள்ளார்.

ஊக்க்ரை கொண்டு டேபிள் பேனை இயக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் சூர்யாவை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சூரியாவை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்