மராட்டியத்தில் பா.ஜ.க சரித்திர வெற்றி பெற்றுள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
மராட்டியத்தில் ராகுல் காந்தி, சரத் பவார் ஆகியோரின் பிரசாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லையென தமிழிசை கூறினார்.;
சென்னை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளையும் தாண்டி பாஜக முன்னிலை பெற்றது. இதனை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"இந்தியாவில் பலம் பொருந்திய மாநிலம் மகாராஷ்டிரா. சின்ன இந்தியா என்றே சொல்லலாம். பலதரப்பட்ட மக்களும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் உள்ள மக்களும் கணிசமான மக்கள்தொகையோடு வாழக்கூடிய மாநிலம். அதனால் பரவலாக பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதை ஒட்டுமொத்த பாரதத்தின் குரலாக பார்க்கிறேன். மராட்டியத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி சரித்திர வெற்றி.
மராட்டியத்தை பொறுத்தவரை, ராகுல் காந்தி, சரத் பவார் ஆகியோரின் பிரசாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லை. இன்று யாராலும் வெல்ல முடியாதவராக பிரதமர் இருக்கிறார் என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது."
இவ்வாறு அவர் கூறினார்.