சதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை - வனத்துறை அறிவிப்பு

சதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Update: 2024-10-14 16:00 GMT

கோப்புப்படம்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வர். இந்த சூழலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவில் பகுதிகளில் மழை பெய்து வருவதால், நாளை முதல் முதல் 18-ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு மலையேறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்