பொதுமக்கள் கவனத்திற்கு... சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்

செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்த சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.;

Update:2025-03-27 15:26 IST
பொதுமக்கள் கவனத்திற்கு... சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்


சென்னை குடிநீர் வாரியத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் / கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையினை மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் செலுத்திட ஏதுவாக அரசு விடுமுறை நாட்களிலும் வசூல் மையங்கள் செயல்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை குடிநீர் வாரியத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் / கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையினை மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டும்.

வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் / பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து அரசு விடுமுறை நாட்களான சனிக்கிழமை (29.03.2025), ஞாயிற்றுக்கிழமை (30.03.2025), மற்றும் திங்கட்கிழமை (31.03.2025) அன்றும் இயங்கும்.

மேலும், நுகர்வோர்கள் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாக செலுத்தலாம்.

இ-சேவை மையங்கள், UPI, வசூல் மையங்களில் உள்ள QR குறியீடு மற்றும் iPoS போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் / கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

எனவே, நுகர்வோர்கள் 31.03.2025 க்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னை குடிநீர் வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்