ஈரக் கையால் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி: அடுத்து நடந்த விபரீதம்
ஈரக் கையால் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.;

சென்னை,
எண்ணூரில் ஈரக் கையோடு மொபைல்போனுக்கு சார்ஜ் போட முற்பட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் 9-ம் வகுப்பு மாணவி அனிதா (14) பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக மின்சாரம் தாக்கியதில் அவர் மயங்கி கீழே சரிந்தநிலையில், அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தசம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.