டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு கல்காஜி தொகுதியில், முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை வேட்பாளராக பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. இந்நிலையில், பிதூரி பொது கூட்டமொன்றில் பேசும்போது, பீகாரில் லாலு பிரசாத், ஹேமா மாலினியின் மென்மையான கன்னங்களை போன்று சாலைகளை அமைப்பேன் என கூறினார்.
அவர் பொய் கூறியுள்ளார். அதனை அவரால் செய்ய முடியவில்லை. ஆனால், நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஓக்ளா மற்றும் சங்கம் விகார் பகுதியில் நாங்கள் சாலைகளை மேம்படுத்தியது போன்று, கல்காஜியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் மென்மையான கன்னங்களை போன்று அமைப்போம் என நாங்கள் உறுதியாக கூறுகிறோம் என்று சர்ச்சையாக பேசினார்.
ஜல்லிக்கட்டு போட்டி; நாளை முதல் முன்பதிவு
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை (06.01.25) முதல் தொடங்க உள்ளது. இதனால், முன்பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள் http://madurai.nic.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சென்னை: பல்லாவரம் - திரிசூலம் இடையே மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். 20 நிமிடத்திற்கும் மேல் நின்றதால், பயணிகள் கீழே இறங்கி, தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
ஜார்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் ஆகியோரின் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பயிற்சியின்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் - 3 பேர் பலி
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த வாகனம் நிலைதடுமாறி உருண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பதவிநீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்யக் கோரி, சியோலில் உள்ள அதிபர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
எம்.பி.பி.எஸ். மாணவி மரணம்
கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்த மாணவி ஒருவர், நேற்று இரவு விடுதியின் 7-வது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வராண்டாவில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் மாணவியின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
பொங்கல் சிறப்பு ரெயில் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் உட்பட 5 கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்த்தன.