ரெயில்கள் ரத்து எதிரொலி.. ஸ்தம்பித்த தாம்பரம் - பஸ்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

ரெயில்கள் ரத்து எதிரொலியாக பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.

Update: 2024-08-03 08:33 GMT

சென்னை,

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 03.08.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரெயில்கள் ரத்து எதிரொலியாக பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. இதனால் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக போலீஸ் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு-கூடுவாஞ்சாரி வரையிலும், தாம்பரம்-பல்லாவரம் வரையிலும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதால், மாநகர பேருந்துகள் தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு அதிக பயணிகள் சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 20 பஸ்களும் கூடுவாஞ்சேரிக்கு 30 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து தி.நகர் பிராட்வேக்கு கூடுதலாக 20 பஸ்கள் இன்று முதல் 15-ம் தேதி வரை இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்