செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

ராதா, தனது செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார்.;

Update:2024-09-02 06:56 IST

சேலம்,

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவருடைய மனைவி ராதா. இந்த நிலையில், நேற்று காலையில் ராதா, தனது செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி ராதா தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் அவருடைய அப்பா, ராதாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ராதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் சார்ஜர் ஒயர் சேதமாகி அதன்மூலம் ராதாவை மின்சாரம் தாக்கியதா? அல்லது அங்கு இருந்த வேறு ஒயர் மூலம் மின்சாரம் தாக்கி ராதா இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்