மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது - அமைச்சர் பொன்முடி
தமிழகம் கல்வியில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது,
இளநிலை பொறியியல் படிப்புகளில் இந்த ஆண்டு 15,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஒரே அளவில் உள்ளது.தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் இருமொழி கொள்கை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. தமிழக மாணவர்கள் இருமொழிக் கொள்கையைத் தான் விரும்புகிறார்கள். தமிழகம் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது அரசியலுக்கானது. தமிழகம் கல்வியில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது. எனவே, நிதியை நிறுத்தி வைக்காமல் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.