இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு இது பெருமையான தருணம் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-13 06:48 GMT

சென்னை,

கல்வி நிறுவனங்களின் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அந்த பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை ஐஐடி, ஒட்டுமொத்த பிரிவில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது. NIRF தரவரிசையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னணியில் இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு இது பெருமையான தருணம். நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால், நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்."

இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்