தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி மாற்றம்: சபாநாயகர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Update: 2024-06-11 07:40 GMT

நெல்லை,

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 24-ந்தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

24-ந்தேதி நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே 20-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டமன்ற உறுப்பினராக நாளை பதவி ஏற்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, சட்டசபை கூட்டத்தொடர் முன் கூட்டியே வரும் 20-ந்தேதி நடைபெறும். அலுவல் ஆய்வு குழு கூடி, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்னையை கொண்டு செல்வேன். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு குடிநீர், மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டால் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்