பூணூல் விவகாரம் - நெல்லை காவல்துறை விளக்கம்
இளைஞர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் அப்பகுதியில் நடக்கவில்லை என மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.;
நெல்லை,
நெல்லை, பெருமாள்புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தான் அணிந்திருந்த பூணூலை அறுத்ததாக இளைஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இளைஞர் அணிந்துள்ள பூணூலை மர்ம நபர்கள் அறுத்ததாக கூறப்பட்ட விவகாரம் காட்டுத்தீ போல பரவியது. இந்த சம்பவத்துக்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர்.
இளைஞரின் புகாரை தொடர்ந்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், இளைஞர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் அந்த நேரத்தில் நடைபெறவில்லை என தெரிய வந்துள்ளது. இளைஞர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் அந்த பகுதியில் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும், இளைஞர் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் நெல்லை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.