கச்சத்தீவை தி.மு.க. தாரைவார்த்ததாக கூறுவது தவறு: டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி

மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளதாக முதல் அமைச்சர் தெரிவித்தார்.

Update: 2024-09-27 08:19 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார் . டெல்லி பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது சுமார் 45 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

"வழக்கமாக 15 நிமிடம் ஒதுக்கும் பிரதமர் மோடி, இன்று 45 நிமிடங்கள் நேரம் கொடுத்தார். 3 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினேன். மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன். இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கும்படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.

கச்சத்தீவை தி.மு.க. தாரைவார்த்ததாக கூறுவது தவறு. கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நான் ஒரு முதல்வராக பிரதமரை சந்தித்தேன். அவர் ஒரு பிரதமராக கோரிக்கைகளை கேட்டுக்கொண்டார்." என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்