சிவகங்கையில் வெளுத்து வாங்கிய கனமழை.. தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்
சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.;
சிவகங்கை,
தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, அரியக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, காரைக்குடியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. மழையால் மக்களும் அவதியை சந்தித்தனர்.