குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி: பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு

குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Update: 2024-08-21 06:45 GMT

சென்னை,

குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையாக கடந்த 14-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி வழிகாட்டி நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குரங்கம்மை நோய் தடுப்பு தொடர்பாக தமிழக பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தொடங்கியது.

பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளிடம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிக உடல் வெப்பம் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

குரங்கம்மையை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எனவே தீவிரமாக கண்காணிக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்