விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

Update: 2024-06-24 05:25 GMT

சென்னை,

விஷ சாராய விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளை முழுமையாக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள அ.தி.மு.க., இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுகிறது. விஷ சாராயம் குடித்து 57 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து விழுப்புரத்தில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்