14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-06-11 06:00 GMT

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா மற்றும் வட மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதை அடுத்து மாவட்டம் வாரியாக ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், 14 மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று, வரும் 20ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் துறை வாரியாக புதிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுகுறித்தும் முதல்-அமைச்சர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வரும் மிக முக்கியமான பணிகள் குறித்தும் மாவட்டங்கள் வாரியாக அரசு திட்டங்களின் நிலை குறித்தும் ஆலோசனையில் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்