கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவு

கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார்.

Update: 2024-06-04 03:27 GMT

சென்னை,

543 தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையின்படி கோவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 258 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 433 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

* அதிமுக - 153

* நாதக - 13

Tags:    

மேலும் செய்திகள்