ஊட்டியில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்த கார்
ஊட்டியில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்தது.;
நீலகிரி,
சென்னையைச் சேர்ந்த கோகுல் என்பவர் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டுரசித்துவிட்டு ஊட்டி வந்துள்ளார். அப்போது, பிங்கர் போஸ்ட் பகுதியில் காரில் வந்துகொண்டிருந்தபோது, கார் கோகுலின் கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது அருகில் இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி காரை நிறுத்த கோகுல் முயன்றுள்ளார். ஆனால் கார் தடுப்புச் சுவரையும் தாண்டி அருகில் இருந்த வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த கோகுல், காரில் இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் இருந்த பெண் ஆகியோர் எந்தவித காயமுமின்றி தப்பினர்.
அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கூரை மீது பாய்ந்த கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.