திமுக ஆட்சியில் 15 மாநகராட்சிகள்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகி உள்ளன.;
சென்னை,
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி என 4 மாநகராட்சிகள் உதயமாகி உள்ளன. புதிய மாநகராட்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார். 21 மாநகராட்சிகள் இருந்த நிலையில் தற்போது மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உதயமானதால், அதன் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"நேற்று நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.