தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை 14-ம் தேதி வெளியீடு
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.;
சென்னை ,
தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை `14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார். தமிழகத்தில் பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.