தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி? 10 எம்.எல்.ஏக்கள் ரகசிய கூட்டம் நடத்தியதால் பரபரப்பு

தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-02-02 18:34 IST
தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி?  10 எம்.எல்.ஏக்கள் ரகசிய கூட்டம் நடத்தியதால் பரபரப்பு

ஐதராபாத்,

தெலுங்கானாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியாக இருந்த பிஆர்எஸை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக உள்ளார். தெலுங்கானாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

எம்.எல்.ஏ அனிருத் ரெட்டி பண்ணை வீட்டில் இந்த ரகசிய கூட்டம் நடைபெற்றுள்ளது. இரண்டு மந்திரிகளின் செயல்பாட்டில் தங்களுக்கு உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக எம்.எல்.ஏக்கள் இந்த ரகசிய மீட்டிங்கை நடத்தியுள்ளனர். இதனால், தெலுங்கனா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மந்திரிக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக ஆலோசிக்க மூத்த மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டமிட்டுள்ளர்.

Tags:    

மேலும் செய்திகள்