உத்தர பிரதேசத்தில் ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை... காதலன் வெறிச்செயல்
வருகிற மார்ச் மாதம் ஆசிரியைக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.;

லக்னோ
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இளம் பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
இந்நிலையில் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்க இருந்தது. இதைத் தெரிந்துகொண்ட அவரது முன்னாள் காதலன் பள்ளிக்கு செல்லும் அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார். பின்னர் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை அந்த பெண் மீது ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் முன்னாள் காதலனும் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் பெண்ணின் உடலானது ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.