ஆந்திராவில் முதல் முறையாக நீர்வழி விமான சேவை
பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திரா சுற்றுலாவை மேம்படுத்த, ஆந்திர மாவட்டம் விஜயவாடா மற்றும் ஸ்ரீசைலம் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடல் விமான சேவையின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து கடல் விமானம் தனது தொடக்க சோதனை பயணத்தை இன்று மேற்கொண்டது. இந்த கடல் விமானம் ஸ்ரீசைலம் சுற்றுலா படகு குழுவிற்கு செல்லும் முன் நீர்த்தேக்கத்தின் நீரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.சோதனை ஓட்டத்தை தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF),காவல்துறை, சுற்றுலாத் துறை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட அதிகாரிகள் குழு மேற்பார்வையிட்டது.
இந்நிலையில், கடல் விமான சேவையின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, புன்னமிகாட்டில் சோதனை முறையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராமோகன் நாயுடு.