தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி பேட்டி

காங்கிரஸ் அரசை விட ஏழு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Update: 2024-07-24 12:05 GMT

புதுடெல்லி,

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது,

மத்திய அரசு தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில், தமிழகத்தில் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. . காங்கிரஸ் அரசை விட ஏழு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு ரெயில் திட்டங்களை நிறைவேற்ற 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் தேவைப்படுகிறது. ரெயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது.தற்போது 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது. என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்