குஜராத்தில் சாலை விபத்து; 38 பேர் காயம்

குஜராத்தில் சொகுசு பஸ் உள்பட 3 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 38 பேர் காயம் அடைந்தனர்.;

Update:2024-11-09 22:49 IST

பனஸ்கந்தா,

குஜராத்தின் அம்பாஜி நகரருகே சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்றும் மற்றும் கார் உள்ளிட்ட மற்ற 2 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், சொகுசு பஸ் சாலையில் கவிழ்ந்தது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதேபோன்று விபத்தில் சிக்கிய காரும் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர், தந்தா அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி அந்த மருத்துவமனையின் டாக்டர் கே.கே. சிங் கூறும்போது, காயமடைந்த 38 பேரில் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பாலம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் என கூறினார். இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்