தேர்தல் பணி செய்யவேண்டாம்-ஆசிரியர்களுக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா வேண்டுகோள்

ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டால் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது யார்? என ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-02-19 09:25 GMT

ராஜ் தாக்கரே

மும்பை:

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஷர்தாஷ்ரம் பள்ளி ஆசிரியர்கள் என்னை சந்தித்தனர். அப்போது தேர்தல் பணி செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக என்னிடம் முறையிட்டனர். அப்போது, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பணியை விட்டுவிட்டு தேர்தல் பணியை மேற்கொள்ளவேண்டாம் என்று அவர்களையும், மற்ற ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டேன்.

அவர்கள் சென்றுவிட்டால் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது யார்? முதல் முறையாக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தவில்லை. தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை செய்வதற்காக ஏன் தனக்கென சொந்த அமைப்பை ஏற்படுத்தக்கூடாது?

எனவே ஆசிரியர்கள் தேர்தல் பணியை செய்யக்கூடாது. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் நான் பார்த்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்