பிரதமர் மோடி இன்று மும்பை வருகை: 3-வது கட்ட மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி வருகையையொட்டி மும்பை, தானேவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2024-10-04 19:45 GMT

மும்பை,

பிரதமர் மோடி இன்று வாஷிம் மற்றும் தானேயில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.56 ஆயிரத்து 100 கோடி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இன்று காலை 11.15 மணி அளவில் வாஷிமில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் மோடி சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் வாஷிமில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.23 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 9.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் நிதியை விடுவிக்கிறார். இதுதவிர ரூ.1,920 கோடி மதிப்பிலான 7 ஆயிரத்து 500-க்கு அதிகமான திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து தானே வரும் பிரதமர் அங்கு நடைபெறும் விழாவில் ரூ.32 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மும்பை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ஆரே - பி.கே.சி. இடையே 3-வது கட்ட மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் தானே உள்வட்ட சாலை திட்டம், தானே மாநகராட்சி புதிய கட்டிடப்பணிக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார்.

தானே நிகழ்ச்சியை முடித்துவிட்டு மும்பை வரும் மோடி, பி.கே.சி.யில் இருந்து சாந்தாகுருஸ் வரை சென்று மீண்டும் பி.கே.சி.க்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய உள்ளார். மெட்ரோ ரெயில் பயணத்தின் போது மோடி 'லாட்கி பகின்' யோஜனா திட்டப்பயனாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி தானே, மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்