பெங்களூரு: தெருவில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி சம்பவம்

பெங்களூருவில் தெருவில் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2025-04-06 17:54 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பெங்களூருவின் பிடிஎம் லேஅவுட் பகுதியில் உள்ள தெருவில் இரவு இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

தெருவில் ஆள்நடமாட்டம் இல்லாத தெருவில் பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவர்களை ஒரு ஆண் பின் தொடந்து வந்தான். அந்த நபர் திடீரென நடந்து சென்ற ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தான்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த ஆண் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் அந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலான நிலையில் இது குறித்து பெங்களூரு போலீசார் தாமாக வழக்குப்பதிவு செய்து பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்